சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் 21ஆம் நாள் லாசா நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சிட்சாங்கின் பல்வேறு இன மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
2024ஆம் ஆண்டு சிட்சாங் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 27ஆயிரத்து 650கோடி யுவானை எட்டியது. இது, 1965ஆம் ஆண்டில் இருந்ததை விட, 150 மடங்குகளுக்கும் அதிகமாகும். வறுமையாகப் பதிவு செய்யப்ட்ட 6லட்சத்து 28ஆயிரம் மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகிலேயே சிறந்த உயிரினச் சுற்றுச்சூழல் கொண்ட பிரதேசங்களில் சிட்சாங் ஒன்றாக விளங்கியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சிட்சாங், சோஷலிச அமைப்பு முறை மற்றும் மக்கள் ஜனநாயக ஆட்சியை உருவாக்கி சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை நடைமுறைப்படுத்தி ஓரளவு வளமான சமூகத்தைப் பன்முகங்களில் கட்டியமைத்துள்ளது. இதுவே சிட்சாங்கின் மாபெரும் வளர்ச்சிக்கான காரணமாகும்.
நிதானம், வளர்ச்சி, உயிரினச் சூழல், எல்லைப் பகுதிப் பாதுகாப்பு ஆகியவற்றை நன்கு முறையில் முன்னேற்றி மக்களுக்கு பயனுள்ள நன்மைகளை அளித்துள்ளமை மற்றொரு காரணமாகும்.
சீனப் பாணி நவீனமயமாக்கல் பாதையில் சிட்சாங்கின் அத்தியாயம் மேலும் செழிப்பாக வளரும்.