இந்திய தலைமையமைச்சர் மோடி, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பை விரைவில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் உயர்வான சுங்க வரி பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கமிட்டியின் ஆணையர் கெவின் ஹாசெட் 10ஆம் நாள் தெரிவத்தார்.
12-ஆம் நாளில், சந்திப்பு நடத்துவதற்கு முன்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியை விரைவுபடுத்தும் வகையில், சுங்க வரியை மேலும் குறைக்க மோடி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.
மின்னணு உற்பத்திப் பொருட்கள், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்கள், வேதியியல் பொருட்கள் முதலிய துறைகள் இதில் அடக்கம் என்று இந்திய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.