சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள், மத்திய ஆப்பிரிக்க குடியரசு தலைவராக தொடர்ந்து பதவி ஏற்கும் துவாத்ராக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் மத்திய ஆப்பிரிக்காவும் தத்தமது முக்கிய நலன்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை நிதானமாக விரைவுபடுத்தியுள்ளன.
இரு தரப்புறவின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றேன். துவாத்ராவுடன் சேர்ந்து, இரு நாடுகளின் நெடுநோக்குக் கூட்டாளியுறவைப் புதிய உயர் நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றேன் என்றார்.
