மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்தப் புதிய மசோதா, தற்போதைய 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தவும், மாற்றியமைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் மசோதா 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1962 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இதில் 298 பிரிவுகள் இருந்தன, மேலும் பல ஆண்டுகளாக இது பல திருத்தங்களைக் கண்டது, இது வரி செலுத்துவோரால் சிக்கலானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருந்தது.
புதிய வருமான வரி மசோதாவை அவையில் அறிமுகப்படுத்திய பிறகு, நிதியமைச்சர் மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தார். இந்தக் குழு அடுத்த மழைக்கால கூட்டத்தொடரில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.