விருதுநகர் கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

Estimated read time 0 min read

விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ராமலட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 6 பேர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 9ஆம் தேதி சைமன் டேனியல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், வீரலட்சுமி என்பவரும் தற்போது உயிரிழந்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author