ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து அணியிலும் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணியில் மட்டும் கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படாமலே இருந்தது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூரு அணியை ஃபாப் டூபிளசிஸ் வழிநடத்தி வந்தார். அதற்கு முன்னதாக விராட் கோலி பெங்களூரு அணியை வழிநடத்தி வந்தார். இதன் காரணமாக விராட் கோலி இந்த சீசனில் மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதேபோல் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.