சேலம் மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழந்ததாக கூறி, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூர் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே தெய்வசிகாமணிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு கொண்ட செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தெய்வசிகாமணியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலில் காயங்கள் இருப்பதால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.