செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பன்னாட்டு ஒத்துழைப்புத் தேவை

பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு மாநாட்டில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

30க்கும் மேலான நாடுகளின் தலைவர்கள், உயர் நிலைப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிகள் முதலியோர் இதில் பங்கேற்று, உலகளவில் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை குறித்து விவாதித்தனர்.

இந்த மாநாட்டில் ‘மனித குலத்திற்கும் உலகிற்கும் நன்மை பயக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய, தொடரவல்ல வளர்ச்சி தன்மை வாய்ந்த செயற்கை நுண்ணறிவு’ என்ற அறிக்கையை பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 61 தரப்புகள் கூட்டாக வெளியிட்டன.


இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி, உலகளவில் இதற்கான மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்று புதிதாக வளர்த்து வரும் பெரிய நாடுகளில் ஒன்றான சீனா, மிக முன்னதாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக்கான முன்மொழிவை 2023ஆம் ஆண்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெளியிட்டார்.
அறிவியல் தொழில் நுட்பம் எல்லையற்ற ஒன்றாகும். மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றை மீளாய்வு செய்தால், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்திப் புத்தாக்கத்தின் ஒவ்வொரு முக்கிய முன்னேற்றம், சர்வதேசப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளிலிருந்து பிரிக்கப்பட முடியாது என கண்டறியலாம்.


செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில், நன்மைகளுடன் தீமைகளும் ஏற்படக் கூடும். இதனைப் பயன்படுத்தும் போக்கில் சமூக மேலாண்மையை மேம்படுத்தினால் சர்வதேசப் பாதுகாப்பு ஆற்றலைப் பேணிக்காக்கும் முக்கிய ஆற்றலாக செயற்கை நுண்ணறிவு மாற முடியும். மாறாக, இது நேர்மை மற்றும் நியாயத்தை அச்சுறுத்தி, அமைதி மற்றும் நிதானத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஊற்று மூலமாக விளங்கக்கூடும், இந்நிலையில் இந்த அறிவியல் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது உலகில் பல்வேறு நாடுகள் கூட்டாக எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.   

Please follow and like us:

You May Also Like

More From Author