திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைத் தொடர்ந்து சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் வைத்து சிலர் மாமிசம் சாப்பிட்ட நிலையில், இது தமிழக அரசியலில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பிப்ரவரி 04ம் தேதி திருப்பரங்குன்றத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னையில் வேல் யாத்திரை நடத்த இந்து அமைப்பினர் சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை காரணமாக்கி மக்களின் ஒற்றுமையை சீர்கொலைத்து விட கூடாது காவல்துறை தரப்பு வாதத்தை முன் வைத்தது.