உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் மகா கும்பமேளாவிற்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சத்தீஸ்கரைச் சேர்ந்த பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பேருந்து மீது கார் மோதியது.
இந்த விபத்தில் 10 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு சென்ற உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.