காசநோயை ஒழிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவில் 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், காசநோயை முடிவுக்குக் கொண்டு வர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடையஇன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
காசநோய் முடிவுக்கு சுகாதாரத்துறை முழு ஆயத்தத்துடன் போராடியதாகவும், முடிவுரை எழுதும் முயற்சிக்கு இடையில் கொரோனா வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். காச நோய் இல்லாத இந்தியா இலக்கை அடைய 2025-க்குப் பிறகு சிறிது காலம் ஆகும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினார்.