மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த தங்க சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கெனியா மாவட்டத்தில் உள்ள அந்த தங்க சுரங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி 10 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.