திரைப்படங்களுடன் சீனப் பயணம் எனும் நிகழ்வின் தொடக்க விழா பிப்ரவரி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, சீனத் தேசிய திரைப்படப் பணியகம், சீன ஊடகக் குழுமம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்வதாகும்.
சீனத் திரைப்படங்களின் வெளிநாட்டு வினியோகம் மற்றும் திரையிடல், வெளிநாடுகளில் சீனத் திரைப்பட விழா மற்றும் கண்காட்சிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சர்வதேச திரைப்பட விழா மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றின் மூலம், “திரைப்படம் + சுற்றுலா” என்ற வடிவில் விளம்பரம் செய்யப்படும்.
மேலும் சீனாவில் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.