மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது.
மார்ச் 9 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
உலகின் முன்னணி ஒருநாள் அணிகளில் எட்டு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த போட்டியை எங்கே எப்போது நேரலையில் பார்க்கலாம் மற்றும் போட்டிகளால் பங்கேற்க உள்ள அணிகள் எவை உள்ளிட்ட விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது?
