அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று சாண்டியாகோ கடல் நீரில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போயிங் EA-18G க்ரோலரின் விமானமொன்று, கடற்படைத் தளமான கொரோனாடோ அருகே தரையிறங்க முயன்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம், சாண்டியாகோ கடலில் விழுந்து நீரில் மூழ்கியது. அந்த ஜெட்டில் இருந்த 2 விமானிகளையும், அருகே மீன்பிடி படகுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.