ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோஃபி 2025 தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மீதான போட்டி நடைபெற்ற நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது இதற்கு முன்பு, இந்தியக் கொடி மட்டும் ஸ்டேடியத்தில் இல்லை என ஒரு வீடியோ பரவியதால் சர்ச்சை எழுந்தது.
மற்ற அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டபோது, இந்தியக் கொடி காணவில்லை என்பதால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியும் ஸ்டேடியத்தில் இடம் பெற்றது என உறுதிப்படுத்தும் விதமான புதிய வீடியோ வெளிவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்ததால், அவர்கள் தங்கள் சாம்பியன்ஸ் ட்ரோஃபி 2025 போட்டிகளை துபாயில் மட்டுமே விளையாட உள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணியில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள் தீவிரமாகி வருகின்றன. இந்தியக் கொடியை முதலில் நீக்கியது யார்? பின்னர் ஏன் மீண்டும் அது எற்றப்பட்டது? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.
Karachi
#PakvsNz #ChampionsTrophy2025 pic.twitter.com/1ycoudNrBX
— Subreena
(@usbeen90) February 19, 2025