2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் அரையிறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்க முயற்சிக்கும் இந்தியாவிற்கு இந்த மோதல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக 14 டாஸ்களை இழந்துள்ளது.