தமிழக அரசு அனைத்து விதமான மக்களும் பயன்பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களை தொழில் முனைவோர் ஆகும் வகையில் மூலிகை, அழகு சாதப் பொருட்கள், தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சி பெற ஒரு சூப்பரான பயிற்சி வகுப்பு அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கலந்து கொள்ளலாம். அதாவது இந்த பயிற்சியானது வரும் 12.3.2025 முதல் 14.3.2025 வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் தேங்காய் எண்ணெய், சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு முடி வளரும் எண்ணெய், கை கழுவும் கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளோடு சுயமான தொழில் தொடங்குவதற்கு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறுவோருக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது. www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.