பிரபலமான கைவினை கலைஞர் கோதாவரி சிங். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். டெல்லியில் வருடம் தோறும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் இவருடைய கைவினை பொம்மைகள் பலமுறை இடம் பெற்றுள்ளது.
இவர் காசியில் வசித்து வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை அவரை நேரில் சந்தித்துள்ளார். இவருக்கு 84 வயதாகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.