சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 7 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளது.
நாளை முதல் 2 நாட்கள் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் மதியம் 12.30 மணி- 2 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.