குரூப்களுக்கு வைக்கப்படும் ப்ரொஃபைல் படத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தானாக உருவாக்கிக் கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த அம்சம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களிடையே மட்டும் வழங்கப்பட்டு சோதிக்கப்படுகிறது.
மெட்டா ஏஐ மூலம் செயல்படும் இந்த அம்சம், பயனர்கள் தங்களுக்கு என்ன மாதிரியான படம் வேண்டும் என்ற தகவல்களை கொடுப்பதன் மூலம், ஏஐ தானாக ப்ரொஃபைல் படத்தை உருவாக்கும்.
இருப்பினும், இந்த அம்சம் தற்போது குரூப் சாட் ப்ரொஃபைல் படங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களுக்குப் பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப் குரூப்களின் ப்ரொஃபைல் படத்தை இனி ஏஐ மூலம் உருவாக்கலாம்
