சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை பகுத்தறிவு செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதனால் வரி விகிதங்கள் விரைவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.
2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வருவாய் நடுநிலை விகிதம் (RNR) 15.8% இலிருந்து 2023 இல் 11.4% ஆகக் குறைந்துள்ளது என்றும், மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தி எகனாமிக் டைம்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மறுபரிசீலனை செய்து எளிமைப்படுத்தும் செயல்முறை அதன் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறினார்.
விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படுகிறதா? நிர்மலா சீதாராமன் தகவல்
