இந்திய வரலாற்றில் இதுவரை அதனடிப்படையில் தான் 1952, 1963, 1973 ஆகிய ஆண்டுகளில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 1973-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டது. அதன்பின் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன என்பதால், அதை ஊக்குவிக்கும் வகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கப்போவதில்லை என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.
தற்போது மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்க வில்லை. ஆனால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கப்பட்ட விதிக்கப்பட்டத் தடை அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான் என்கிறார் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டாலும் அது பாதிப்புதான்.
தென் மாநிலங்களின் குரல் தற்போதைய 23.76% (129/543) இருந்து 14.53% (129/888) ஆக குறைந்தது விடும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கூறுபவர்கள், உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயராது என்று கூறவில்லை என்கிறார்.