கடந்த ஆண்டில், சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய நிறுவனங்களில், அன்னிய தொழில் நிறுவனங்களின் இலாப விகிதம், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய அனைத்து தொழில் நிறுவனங்களின் இலாப விகிதத்தை விட 1.2 விழுக்காடு புள்ளிகள் அதிகம். சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் பங்களிப்பாளரும், நலன் பெறுபவருமான அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், சீன பொருளாதார வளர்ச்சியுடன் ஆழமாக இணைந்துள்ளன.
இவ்வாண்டின் சீன அரசு பணியறிக்கையில், உயர் தரத்துடன் வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்கி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அன்னிய முதலீட்டை நிதானப்படுத்துவது, சீன அரசின் 10 முக்கிய பணி கடமைகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில் புத்தாக்கத்தை நோக்கிச் சென்ற சீனச் சந்தை, அன்னிய முதலீட்டுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்பை வழங்கியுள்ளது. பெருமளவிலான சந்தை, முழுமையான தொழில் மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்பு, மேம்பட்டு வரும் வணிகப் புத்தாக்கச் சூழல், போதுமான திறமைசாலிகள், அதிகரித்து வரும் நுகர்வு தேவை முதலியவை, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் சிறப்பு சாதகங்களாகும்.
சீனச் சந்தையில் கொள்கை சலுகையுடன் மேலதிக வாய்ப்புகள், அன்னிய தொழில் நிறுவனங்களுக்குக் காத்திருக்கின்றன.