கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் அவரை மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வரவேற்றார்.
பிரதமர் மோடி மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொரிஷியஸ் நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
மேலும், இந்திய கடற்படையின் போர்க்கப்பலுடன் இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும்.
நீண்ட காலமாக இருக்கும் இருநாட்டின் உறவுகளுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணி மொரிஷியஸின் மக்கள்தொகை அமைப்பு ஆகும். அங்கு அதன் 1.2 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றார் பிரதமர் மோடி
