2024ஆம் ஆண்டின் சீனப் பொருளாதார வளர்ச்சி விகிதித்தை முன்பு மதிப்பிட்டிருந்த 4.5 விழுக்காட்டில் இருந்து 4.8 விழுக்காடாக உயர்த்தியுள்ளதாக, உலக வங்கி அண்மையில் வெளியிட்ட உலகளாவிய பொருளாதார எதிர்காலம் பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து , சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்
உலக வங்கியின் இந்த அறிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் சீன பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது, சீனப் பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
உலகத்துடன் இணைந்து வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் உலக நவீனமயமாக்கலையின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னெடுக்கவும் சீனா விரும்புகிறது என்றும் லின் ஜியான் கூறினார்.