சீனாவின் ஹாய்நான் வணிக செயற்கைக்கோள் ஏவு மையத்தின் ஒன்றாவது இலக்க ஏவுத் தளத்திலிருந்து 12ஆம் நாள் அதிகாலையில் லாங்மார்ச்-8 Y6 ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் 18 செயற்கைக்கோள்கள் ஒரே முறையில் திட்டமிடப்பட்ட சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இந்த ஏவு மையத்தின் 2ஆவது இலக்க ஏவுத் தளம் அதன் முதலாவது ஏவுதலைப் வெற்றிகரமாக நிறைவேற்றியது. சீனாவின் முதலாவது வணிக செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இரட்டை ஏவு தள வசதி இருப்பதை இது வெளிக்காட்டியுள்ளது.
சீனாவின் வணிக விண்வெளித் தொழில் சங்கிலி புதிய செயல்பாடுகளை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதையும் இது எடுத்துக் காட்டுகிறது. தற்போது, ஹாய்நான் வணிக ஏவு மையத்தில் அதன் 2ஆவது கட்ட கட்டுமானப் பணிகள் பன்முகங்களிலும் நடைபெற்று வருகின்றன.