சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 31ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, அரசவை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி, உச்ச மக்கள் நீதி மன்றம், உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் கட்சி குழுக்கள் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் பணிகள் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டதுடன், 2024ஆம் ஆண்டிற்கான அவற்றின் பணி ஏற்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2024ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். 14ஆவது ஐந்தாண்டு திட்ட இலக்குகளை நனவாக்குவதற்கான முக்கிய ஆண்டாகும். ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தின் சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதன் போக்கில், கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் நெடுநோக்கு திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், உயர் தர வளர்ச்சி என்ற முதன்மை கடமையைச் செவ்வனே மேற்கொண்டு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை ஆழமாக்கி, மத்திய பொருளாதாரப் பணிக்கூட்டத்தில் உறுதிப்க்படுத்தப்பட்ட முக்கியக் கடமையை நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதம் செய்து, பொது மக்களுக்கான நன்மைகளை அதிகரித்து, சமூகத்தின் நேர்மை மற்றும் நீதியைப் பேணிகாக்க வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.