ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது வாழ்க்கையில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மனிதர்களை விட ரோபோக்கள் துல்லியமாக வேலைகளை செய்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நாட்டியில் பொது வாழ்க்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து துறைகளிலும் சேவை திறன் மற்றும் வணிக மேம்பாட்டை மேம்படுத்த ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
அங்கு பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களில் ரோபோக்கள் இருப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
ஏனெனில் அவை அனைத்து வேலைகளையும் செய்து தேவைகளைப் பூர்த்தி செய்யும். அதேபோல் பணப் பரிவர்த்தனைகளை எளிதாகவும், வேகமாகவும், அத்துடன் துல்லியமாகவும் செய்துமுடிக்கும்,
ஆகவே அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ரோபோக்கள் ஊழியர்களாகக் பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று அந்நாட்டு நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், 98 சதவீதம் துல்லியத்துடன் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் மூலம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மனிதர்கள் வேலை செய்யும் நேரத்துடன் கணக்கிட்டால் 39,000 மணி நேரத்தில் இந்த வேலையை ரோபோக்கள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது அந்நாட்டு உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் அறிவு அடிப்படையில் புதுமையான பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
இது 2071 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் அதன் நூற்றாண்டு விழாவுடன் உலகின் சிறந்த நாடாக மாற்றும் இலக்குடன் இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.