தமிழக கேரளா எல்லை பகுதியில் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மன்னாரதரை கார்டன் சார்பில் 17 வது மலர் கண்காட்சி கடந்த மாதம் 28 ம் தேதி முதல் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான மலர்கள், மூலிகைகள், செடிகள் மற்றும் ஏராளமான அலங்கார செடிகள், வீட்டு அலங்கார செடிகள், பார்வையாளர்களை கவரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு திடல்கள், இன்னிசை கச்சேரிகள்,பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு, நடன, நாட்டியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 20 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை தினமும் வெளி மாவட்ட மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தோடு வந்து பார்வையிட்டு பின்னர் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.