லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
எனவே, முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்யவுள்ளது. கடந்த சில போட்டிகளாக லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த மிட்செல் மார்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை அவருக்கு பதிலாக அணியில் ஹிம்மத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ : ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(w/c), ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்
குஜராத் : சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(c), ஜோஸ் பட்லர்(wk), வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்
டாஸ் வென்ற பிறகு பேசிய ரிஷப் பண்ட் “மிட்செல் மார்ஷின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் அவளை கவனித்துக்கொள்கிறார், ஹிம்மத் சிங் பிளேயிங் லெவனில் வருகிறார்” என தெரிவித்தார்.