பாகிஸ்தானுக்கு “கூடுதல் நிதி நெருக்கடி”.

Estimated read time 0 min read

பாகிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800, ஒரு கிலோ அரிசி ரூ. 340 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் சுமார் 1 கோடி பேர் பட்டினியால் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் எல்லாம் விடுப்பில் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால் ராணுவ பலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அலசப்படும்.

ஆனால் தற்போது பொருளாதார சிக்கல் குறித்தும் அலச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் நிலையில் இந்தியாவுடன் போர் தொடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தி வைத்துள்ளதால் அங்கு மேலும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மாகாணங்களில் 90% விவசாயி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு கோடி மக்கள் பசி பட்டினியால் தவித்து வரும் நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டால் மேலும் அதன் நிலை அதிகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் கராச்சி பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு போர் பதற்றம் தான் காரணம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 70 சதவீதத்தை தாண்டி உள்ளது. அரசு வருவாயிலும் 40 முதல் 50 சதவீதம் வட்டி செலவுக்கு சென்று விடுகிறது. இப்படி பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் பாகிஸ்தானில் போர் மேகமும் சூழ்ந்துள்ளது.

அணு ஆயுதங்களுக்கு பதில் முதல் ஆயுதமாக தண்ணீரை எடுத்து இந்தியாவின் ராஜதந்திரமும் படிப்படியாக வேலை செய்ய தொடங்கி இருக்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Please follow and like us:

You May Also Like

More From Author