பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், முக்கிய பருவநிலை பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்தில் 21 பேர் காயமுற்றதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.
பெலெமில் உள்ள COP30 மாநாட்டு வளாகத்தில் உள்ள “நீல மண்டலத்திற்கு” (Blue Zone) அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் அரங்கில் (Country Pavilion) இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டபோது, சுமார் 200 நாடுகளின் அமைச்சர்கள், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் பருவநிலை தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்
