137ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி நிறைவு

Estimated read time 0 min read

சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்ற 137ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவடைந்தது.

இதில் 219 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 2 இலட்சத்து 8890 வெளிநாட்டு கொள்முதல் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

2024ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இருந்ததை விட இது 17.3 விழுக்காடு அதிகம். மேலும், சுமார் இதில் எட்டப்பட்ட ஏற்றுமதி உடன்படிக்கைகளின் மதிப்பு 2544 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இது, கடந்த ஆண்டை விட 3 விழுக்காடு அதிகமாகும்.

இப்பொருட்காட்சியின் தொடர்புடைய தரவுகளின்படி, வளரும் நாடுகள் இப்பொருட்காட்சியில் அதிகமாக பங்கெடுத்தன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் பங்கு, இப்பொருட்காட்சியில் 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பாரம்பரிய சந்தையின் வியாபாரம் நிதானமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author