தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவர்களின் தண்டனை விவரங்கள் நண்பகல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்கள் மோசடி மூலம் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொடுமை செய்யப்பட்டதுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. இ
ந்த வீடியோக்கள் வெளிவந்ததுடன், சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
