மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்க்கலாம்.
இந்த முறை, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது 2023 ஐ விட 0.06 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பெண்களைச் சரிபார்க்க, மாணவர்கள் CBSE பொதுத் தேர்வு அனுமதி அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளபடி, ரோல் எண், பிறந்த தேதி மற்றும் பள்ளி எண் போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும்.
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
