மாதம் ரூ.84,000 சம்பளத்தில் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை..!

Estimated read time 1 min read

மத்திய அரசு வேலையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு… (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.84,000 வரையும், சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.45,000 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

இன்ஜினியர் பணிக்கு மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல் துறைகளில் முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சூப்பர்வைசர் பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ST, OBC மற்றும் PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் 21.05.2025 அன்று தொடங்கி 11.06.2025 அன்றுடன் நிறைவடைகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் BHEL இணையதளமான [https://careers.bhel.in/] இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் “Sr. Manager / HR – IR & Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli – 620014” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author