அயோத்தி ராமர் கோவிலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது மனைவியுடன் தரிசனம் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், கடந்த 22-ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், , முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியர்களின் பல நூற்றாண்டு கனவு நிறைவேறியதால், நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அயோத்தி இராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கிய பிறகு, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் வருகின்றனர்.
மேலும்,வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது மனைவியுடன் ராமர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இராமர் பிறந்த இடமான அயோத்தியின் பழைய பெருமை, பிராண பிரதிஷ்டை மூலம் திரும்பி உள்ளது. இங்கு நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அயோத்தியில் இராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதில் பெருமையடைகிறோம். நான் பௌத்த கலாச்சாரத்தில் வளர்ந்தாலும், இந்து சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறினார்.
முன்னதாக, பிஜி நாட்டின் துணை பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பீமன்பிரசாத், அயோத்தி இராமர் கோவிலில் தரிசனம் செய்தார்.