இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா இறப்புகள் 32 ஆக அதிகரித்துள்ளன.
தற்போது கேரளாவில் 1,435 பேரும், டெல்லியில் தற்போது 483 பேரும், மகாராஷ்டிராவில் 506 பேரும், மேற்கு வங்கத்தில் 331 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.