இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்ராஜா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொது வாழ்வில் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக களத்தில் இறங்கி அயராது போராடிவரும் தங்களின் சிறப்பான கட்சி பணி, தேச பணி தொடரவும், நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு சீரும், சிறப்புமாக வாழ்ந்திடவும் இந்த இனிய நன்னாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
