சூப்பர் ஐடியா.., ஆன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!

Estimated read time 1 min read

அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும், கூகிள் இப்போது தேடலில் AI பயன்முறையைச் சேர்த்துள்ளது. கூகிள் ‘AI Mode’ என்பது Google-இன் Gemini மாதிரிகளால் (Gemini models) இயக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் அனுபவமாகும்.

இது தேடல் முடிவுகளைத் தாண்டி, பயனர்களின் கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் பதிலளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை எளிதாகக் கண்டறியலாம், ஒப்பீடு செய்யலாம். இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு முதல் ஷாப்பிங் வரை புதிய அனுபவத்தை வழங்குகிறது.

அதாவது, நேரில் போய் ட்ரெஸ் வாங்கும் போது, அந்த டிரஸ் நமக்கு சரியாக இருக்கிறதா என்பதை ட்ரையல் ரூமில் போட்டு பார்த்து வாங்குவோம். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொழுது, அந்த வசதி இல்லை என்பதால் இதற்கு தீர்வாக தான் கூகுள்AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் வகையில் TRY IT ON என்ற அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், ஆடைகளை தேர்வு செய்து, புகைப்படத்தை பதிவிட்டால், அது பொருத்தமாக இருக்கிறதா என அறிய முடியும். அதுமட்டும் இல்லாமல், இது நாம் போட்டு பார்த்து வாங்குவது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். இது பயனர்களை ஈர்க்கக்கூடிய முன்னேற்றமாகும்.

தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Google (@google)

Please follow and like us:

You May Also Like

More From Author