கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்டு வந்தால் எந்த நோய் அகலும் தெரியுமா ?

Estimated read time 0 min read

பொதுவாக கருவேப்பிலை,அகத்தி கீரை ,ஜாதிக்காய் போன்ற பொருட்களை ஆயுர்வேத மருத்துவத்தில் நமக்கு பயனளிக்கிறது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலருக்கு லூஸ் மோஷன் இருக்கும் .அவர்கள் கறிவேப்பிலை சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்டு வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

2.சிலருக்கு தீராத மலசிக்கல் இருக்கும் .அவர்களுக்கு கறிவேப்பிலை மலச்சிக்கல் பிரச்சினையையும் போக்குகிறது.

3.மேலும் மலச்சிக்கலுக்கு அகத்தி கீரையிலும் பலனுண்டு .அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.

4.இந்த பொடியை காலை, மாலை என இரு வேளை 1 ஸ்பூன் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

5.சிலருக்கு வாயு பிரச்சினை பாடாய் படுத்தும் .இவர்கள் ஜாதிக்காய் 20 கிராம், சுக்கு 20 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்து மூன்றையும் நன்கு தூளாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

6.இந்த பொடி ½ கிராம் மற்றும் ¼ தேக்கரண்டி சர்க்கரை இவற்றை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் குடல்வாயு குணமாகும்.

7.சிலருக்கு மூலம் வந்து அவதி படுவர் .அவர்கள் 10 கிராம் நாயுருவி இலைகளை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

8.இதை 10 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து காலை, மாலை என 2 வேளைகளில் 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த மூலம் நம்மை விட்டு ஓடி விடும்

Please follow and like us:

You May Also Like

More From Author