ஈரானின் 95 % ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிப்பு – இஸ்ரேல் தகவல்!

Estimated read time 1 min read

ஈரானின் 95 சதவீத ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது..

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் நேரிட்டுள்ள நிலையில் இதுவரை ஈரான் அனுப்பிய 480-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானால் அனுப்பப்பட்ட ஆயிரம் ட்ரோன்களில் 200 மட்டுமே தங்களின் எல்லையை வந்தடைந்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் அந்த நாட்டில் உள்ள அராக் நீர் உலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டது.

மேலும் ஈரானால் அனுப்பப்படும் ட்ரோன்கள் இலக்கை அடையும் முன்பே தங்களுடைய விமானப்படை மற்றும் கடற்படை மூலம் இடைமறித்து அழிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புபடை தெரிவித்துள்ளது.

Please follow and like us:

More From Author