சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் பணி விதிமுறையைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு 30ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் பரிசீலனை செய்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
இந்தப் பிரிவை நிறுவுவது, கட்சி மத்திய கமிட்டி முக்கிய வேலைகளை ஒருங்கிணைத்து தலைமை வகிப்பதையும் முக்கிய கடமைகளின் அமலாக்கத்தை முன்னேற்றுவதையும் மேம்படுத்துவதற்கான முக்கிய அமைப்பு முறையின் நடைமுறை ஆகும். முக்கிய பணிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடு, கண்காணிப்பு மற்றும் முன்னெடுப்பிற்குப் பங்காற்றுவதில் அது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்று இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.