அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதில், திருமண முன்பண அறிவிப்பை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனிமேல், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். முன்னதாக, தேவையின் அடிப்படையில் பணிக் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் திருமண முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.