வார இராசிப்பலன் ( 06-07-2025 முதல் 12-07-2025 வரை)

மேஷம் :

இராசிநாதன் செவ்வாய் 5ம் இடத்தில் நட்பு நிலையில் கேதுவுடன் சூட்சும வலு பெற்று இருப்பதால் நல்ல உறுதியான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழி மகிழ்ச்சி ஏற்படும். .

பள்ளி மாணவ மாணவிகள் கல்வி சிறப்பாக இருக்கும்.

இராசிக்கு 2/7 ம் அதிபதி சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல தன வரவு இருக்கும். திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும்.

கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும்.

இராசிக்கு 3/6 ம் அதிபதி புதன் கடகத்தில் பகை வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் சற்று தாமதப்படலாம், இளைய சகோதரங்களோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம், உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக காணப்படலாம் அதனால் மன அழுத்தம் ஏற்படலாம்.

வார ஆரம்பத்தில் சந்திரன் 8ல் இருந்தாலும் பொளர்ணமியை நோக்கி செல்வதால் பெரிய பாதிப்புக்கள் இல்லை, தந்தை வழி ஆதரவு கிடைக்கும், பெரியோர்களி்ன் ஆசிகள் கிடைக்கும் அற்புதமான வாரம். தொழில் சிறப்பாக இருக்கும்.

அனுகூலமான நாட்கள், 06, 11,12

 

ரிஷபம் :

இராசிநாதன் சுக்ரன் இராசியிலே ஆட்சி பெற்று இருப்பதால் தைரியமான மனநிலையுடன் செயல்படும் அற்புதமான வாரமாக அமைகிறது.  சுக்ரன் பார்வை இராசிக்கு 7ல் இருப்பதால் கணவர் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய கடன் வாங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

இராசிக்கு 2/5 ம் அதிபதி புதன் கடகத்தில் பகை பெற்று இருப்பதால், குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லுதல் நன்மையை பயக்கும். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், பேச்சில் கவனம் தேவை, நிதானத்துடன் பேசுவது நல்லது. இருப்பினும் சந்திரன் வார மத்தியில் முழு ஒளியுடன் இருப்பதால் தனம் குடும்பம் வாக்கு தைரியம் முயற்சி அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இராசிக்கு 7ம் அதிபதி செவ்வாய் சிம்மத்தில் நட்பு நிலையில் உள்ளதால் குடும்பத்தில், திருமண மங்கள நிகழ்ச்சி சம்பந்தமான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

இராசிக்கு 11ம் அதிபதி குரு அஸ்தங்க நிலையிலே இருப்பதால் இலாபங்கள் / வருமானங்கள்  குறைவாக காணப்படலாம், 9,10 தேதிகளில் தன வரவு சீராகும்.

வார இறுதியில் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம்,

அனுகூலமான நாட்கள் – 6,7,8

 

மிதுனம் :

இராசி நாதன் புதன் கடகத்தில் பகை வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று தைரியம் குறைவுடன் காணப்படுவீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். ஆயினும் சந்திரன் பெளர்ணமியை நோக்கி செல்வதால் வாரத்தின் மத்திய மற்றும் பிற்பகுதியில் சந்திர அதி யோகத்தில்   புதன் இருப்பதால் தடைபெற்ற காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும்.

சனியின் 7ம் பார்வையால் வண்டி வீடு சம்பந்தமான விஷயத்தில் செலவுகள் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மேலும் 9,10 தேதியில் சந்திரன் முழு ஒளியுடன் இருப்பதால் சந்திர அதி யோகத்தில் 12,  இராசி மற்றும் 2ம் இடத்தை பார்ப்பதால் சுப விரையங்கள், காரிய வெற்றி மற்றும் தன வரவு மேம்படும்.

குரு இன்னும் அஸ்தங்க நிலையிலே இருப்பதால் வியாபாரம் சற்று மிதமாகவே இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சுக்ரன் 12ம் இடத்தில் இருந்து சுபத்துவமாக இருப்பதால், சுப செலவுகள் செய்வீர்கள், வெளியூர் வெளிமாநிலம், வெளிநாடு பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

 

அனுகூலமான நாட்கள் 7,8,9,10

 

 

கடகம் :

இராசி நாதன் சந்திரன் இந்த வார தொடக்கத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் பெளர்ணமியை நோக்கி செல்வதால் தன்னம்பிக்கையுடன் தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.

தனாதிபதி சூரியன் 12ல் மறைவதால் வியாபாரத்தில் இலாபம் / பண வரவில் சற்று பின்னடைவு இருக்கும்

இராசிக்கு 11/4ம்  அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் இருப்பதால், வியாபாரத்தில் நல்ல இலாபம் உத்தியோகத்தில் நல்ல வருமானம் சம்பள உயர்வு ஏற்பட சாதகமான வாரம். மேலும் ஆட்சி பெற்ற  சுக்ரன் 5ம் இடத்தை பார்ப்பதால், நல்ல சிந்தனை, குல தெய்வ அனுக்ரகம், குழந்தைகளால் மகிழ்ச்சி, குழந்தைகள் தேர்வில் வெற்றி பெரும் நல்ல வாரமாக இருக்கிறது.

 

இராசிநாதன் சந்திரன் பெளர்ணமி அமைப்பில் 6,7 ம் இடத்தில் இருப்பதாலும், அதி யோகத்தால் 11/12/ இராசியை பார்ப்பதாலும் புஉதிந கடன் வாங்குதல், குடும்பத்தில் மகிழ்ச்சி, கூட்டுத் தொழிலில் மேன்மை, வியாபாரத்தில் நல்ல இலாபம், குடும்பத்தில் சுப விரைந செலவுகள், மற்றும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நல்ல சாதகமான வாரமாக அமைகிறது.

அனுகூலமான நாட்கள் 9,10,11,12

 

சிம்மம் :

இராசிநாதன் சூரியன் குருவை அஸ்தங்கப்படுத்தி சுபத்துவமாக இருப்பதால் நல்ல தேக ஆரோக்கியத்துடனும், ஆளுமை திரத்துடனும் இந்த வாரம் செயல்படுவீர்கள், தந்தை / அரசு வழி ஆதாயங்கள் கிடைக்க சாதகமான வாரம்.  குரு அஸ்தங்கம் நிலையில் நீடிப்பதால், சிந்தனையில் அவ்வப்பொழுது குழப்பங்கள் நேரிடலாம், குழந்தைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம், இருப்பினும் சுபத்துவமாக சூரியன் பார்வையால் இவை சீராகும்.

இராசிக்கு 10,3 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் இருப்பதால், தொழிலில் நல்ல மேன்மை, எடுத்த காரியங்களில் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.  .

7ல் உள்ள இராகுவிற்கு அஸ்தங்கமான குரு பார்வை பலம் குறைவதால் குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

தாயார் மூலம் நல்ல ஆதரவு கிடைக்கும்.  

வார மத்தியில் மற்றும் இறுதியில் பூர்ண ஒளி அமைப்போடு உள்ள சந்திரன் நிலையால் தொழில் / இலாபம் /. வருமானம் / ஆரோக்கியம் / சிந்தனை / இவற்றில் சிறப்பாக விளங்கும் நல்ல வாரம். மேலும் குடும்பத்தில் சுப விரையங்கள் வாரத்தின் பிற்பகுதியில் ஏற்படலாம்

அனுகூலமான நாட்கள் 6,11,12

 

கன்னி :

இராசிநாதன் புதன் இலாபஸ்தானத்தில் பகை பெற்று இருந்தாலும், வாரத்தின் மத்தியிலும் வார இறுதி நாட்களிலும் பூரண சந்திரன் பார்வையினால் சுபத்துவப்பட்டு நற்பலனையே தரும் வாரமாக அமைகிறது. தொழிலில் நல்ல மேன்மை சிந்தனையில் தெளிவு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் நல்ல சாதகமான வாரம்.

இராசிக்கு 2,9 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் விஷயங்கள் நிறைவேறும் நல்ல அமைப்பில் இந்த வாரம் உள்ளது, மேலும் தன வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் அற்புதமான வாரம்.

வார ஆரம்பத்தில் சந்திரன் நீச்ச நிலையில் இருப்பதால் காரியத்தடை தாமதம் ஏற்படலாம், வார மத்தியில் மற்றும் இறுதியில் பூரண சந்திர அமைப்பில் இருப்பதால் வண்டி வீடு வாங்கும் முயற்சிகள், தாய் வழி ஆதரவு. குழந்தைகளால் மகிழ்ச்சி, தடைபட்ட காரியங்கள் நிறைவேறுதல், தொழிலில் மேன்மை நல்ல இலாபம், வருமான உயர்வு போன்ற அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான வாரம்.

செவ்வாயின் பார்வையால் பழைய கடன்கள் அடைப்பது, ஆரோக்கியத்தில் முன்னேற்றம், எதிரிகளிடம் வெற்றி ஏற்படும் நல்ல வாரமாக அமைகிறது.

 

அனுகூலமான நாட்கள் 7,8,9,10

 

துலாம் :

இராசி மற்றும் 8ம் அதிபதி 8ல் ஆட்சி பெற்று இருப்பதால் நல்ல சிந்தனை தைரிந்த்துடன் செயல்படும் நல்ல வாரமாக அமைகிறது, 8ம் இடம் சுக்ரன் இருப்பால் சுபத்துவப்பட்டு திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம், வெளியூர் வெளிமாநில வெளிநாடு பயணங்கள் வெற்றியைத் தரும்.

இலாபாதிபதி சூரியன் குருவால் சுபத்துவப்பட்டு நல்ல இலாபத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான வாரம். மூத்த சகோதரங்களால் நல்ல ஆதாயம் ஆதரவு கிடைக்கும். அரசு மற்றும் தந்தை சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்களே நடைபெறும்.

பாக்கியாதிபதி மற்றும் விரையதிபதி புதன் சந்திரனால் சுபத்துவப்பட்டு தடை தாமதப்பட்ட காரியங்களை இனிதே நிறைவேறும் நல்ல வாரம்.

4,5 ம் அதிபதி சனி வார இறுதியில் வக்கிரம் அடைவதால் தாயார் குழந்தைகளால் சற்று மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.

பூரண சந்திரன் அமைப்பால் வார மத்தியிலும் இறுதியிலும் தாமதப்பட்ட காரியங்கள் நிறைவேறுதல், பெரியோர்கள் ஆசிர்வாதம், தந்தை வழி்ஆதரவு, தொழிலில் மேன்மை தல்ல  இலாபம் மற்றும் நல்ல பண வரவு இருக்கும் நல்ல வாரமாக அமைகிறது.

அனுகூலமான நாட்கள் – 6,09,10

 

விருச்சிகம் :

இராசிநாதன் செவ்வாய் சிம்மத்தில் கேதுவுடன் சஞ்சரிப்பதால்  இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகமாகவும் தைரியத்துடனும் நல்ல தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம சீராக இருக்கும்.

இராசிக்கு 7,12 ம் அதிபதி ஆட்சி பெற்று 7ம் இடத்திலே இருப்பதால் கணவர் மனைவி விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது. திருமண வரன் பார்க்கும் முயற்சிகள் தாமாதப்படலாம்.

தனாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி குரு அஸ்தங்பம் நிலையில் நீடிப்பதால் தன. ரஙில் பின்னடைவு இருக்கும் குழந்தைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். ஆயினும் 9,10 தேதிகளில் பூரண சந்திர அதி யோகத்தினால் இந்த பலன்கள் சாதகமாக மாறும்.

இராசிக்கு 2,5 அதிபதி குரு இன்னும் அஸ்தங்க நிலையில் இருப்பதால் தன வரவு சற்று குறைப்படும், எனினும் 9,10 தேதிகளில் இந்த பலன்கள் மாறி நற்பலனையே தரும்.

வார ஆரம்பத்தில் செலவுகள் இருந்தாலும் பிற்பகுதியில் கட்டுக்குள் இருக்கும்.

இராசிக்கு பத்தாம் அதிபதி சூரியன் குருவால் சுபத்துவப்படுவதால் தொழிலில் நல்ல ஏற்றம் ஏற்படும்.

வார மத்தியில் மற்றும் இறுதியில் பூரண சந்திரன் இருப்பு மற்றும் மீர்வையினால் குடும்ப மகிழ்ச்சி, தன வரவு, தடைபட்ட காரியங்கள் நிறைவேறுதல், தொழிலில் மேன்மை முயற்சிகள் வெற்றிகரமாக பலன்களை கொடுக்கும் அற்புதமான வாரம்.

அனுகூலமான நாட்கள் 7,8,11,12

 

தனுசு :

இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் அஸ்தங்க நிலையிலேயே இருப்பதால்,  குடும்பத்தில் கணவர் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது.

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சற்று குறைந்து காணப்படலாம், மன குழப்பங்கள் ஏற்படலாம். எனினும் 9,10 தேதிகளில் பூரண சந்திரன் பார்வையால் இது நிவர்த்தியாகும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வீடு சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம்.

இராசிக்கு 7,10 ம் அதிபதி புதன் கடகத்தில் சஞ்சரிப்பதாலும் சந்திர அதி யோகத்தால் சுபத்துவப்படுவதால் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழும். தொழில் நன்றாக இருக்கும். சுக்ரன் ஆட்சி பெற்று இருப்பதால் தொழிலில் நல்ல இலாபம் மற்றும் உத்தியோகத்தில் நல்ல வருமானம் மற்றும் உயர்வு ஏற்படலாம்.

இராசிக்கு 6,11 அதிபதி 6 ல் ஆட்சி பெற்று இருப்பதால் புதிய கடன்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது, ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வம்பு வழக்குகளில் கவனம் தேவை.

பாக்கியாதிபதி சூரியன் குருவை அஸ்தங்கப்படுத்தி சுபத்துவமாகி நற்பலனையே தருகிறது. அரசு தந்தை சம்பந்தமான விஷயங்களில் சாதகமாக இருக்கிறது.  

வார ஆரம்பத்தில் சுப விரையங்கள் இருந்தாலும் பிற்பகுதியில் இராசியிலே முழு ஒளியுடன் சஞ்சரிப்பதால் நல்ல மனநிலையில் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் எந்த செயலையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.. திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேரும். தன வரவு வாரத்தின் இறுதியில் நன்றாக இருக்கும்

அனுகூலமான நாட்கள் – 6,09,10

 

மகரம் :

இராசிக்கு 5,10 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று 5ம் இடத்தில் இருந்து இலாபஸ்தானத்தை பார்ப்து மிகச்சிறந்த நேரம். தொழிலில் நல்ல இலாபம் உத்தியோகத்தில் நல்ல வருமானம் வேலை மாற்றம் மற்றும் சம்பள உயர்வு ஏற்பட நல்ல காலம். குழந்தைகளால் மகிழ்ச்சி நிகழும். தொழில் நன்றாக மேம்படும் வாரமாக அமைகிறது.

பாக்கியாதிபதி புதன் சந்திர அதி யோகத்தில் வாரத்தின் பிற்பகுதியில் நல்ல நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்ட விஷயங்கள் எளிதாக நிறைவேறும் அற்புதமான வாரம்.

 

எட்டாம் அதிபதி சூரியன் 6ல் குருவை அஸ்தங்கப்படுத்தி சுபத்துவமாக இருப்பதால் எதிர்பாராத தன்வரவுகள் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் நல்ல வாரம்.

சந்திரன் இந்த வார முழுவதும் நல்ல நிலையில் ஒளியுடன் சஞ்சரிப்பதால் தொழிலில் மேன்மை நல்ல இலாபம் தன்னம்பிக்கை தைரியம் நல்ல சிந்தனையுடன் செயல்படும் அற்புதமான வாரமாக அமைகிறது. வார இறுதியில் சுப செலவுகள் ஏற்படலாம்.

இராசிநாதன் இராசிக்கு 3 ம் இடத்தில் இந்த வாரத்தின் மத்தியில் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் சற்று முயற்சி ஸ்தானத்தில் பின்னடைவு ஏற்படலாம்..

 

அனுகூலமான நாட்கள் – 7,8,11,12

 

கும்பம் :

இராசிக்கு 4,9 அதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று 4ம் இடத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். தாய் வழி ஆதரவு, வண்டி வீடு வாங்குவது சம்பந்தமான முயற்சிகள் நன்றாக அமைகிறது. மேலும் பாக்கியாதிபதி ஆட்சி பெறுவதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் முயற்சிகள் இனிதே நிறைவேற சாதகமான நேரம்.

இராசிக்கு 7ம் அதிபதி சூரியன் சுபத்துவமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையும். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இனிதே நிறைவேறும்.

இராசிக்கு தனாதிபதி மற்றும் இலாபாதிபதி குரு அஸ்தங்கம் நிலையிலேயே இருப்பதால்  தன வரவு குறைந்து காணப்பட்டாலும் வார இறுதியில் சந்திர அதி நோகத்தால் தன வரவு சீராகும்.  

சந்திரன் பாக்கிய தொழில் இலாபஸ்தனத்தில் ஒளியுடன் சஞ்சரிப்பதால் தொழில் இலாபம் வருமானம் மற்றும் முயற்சிகள் சிறப்பாக அமையும் வாரம். வார இறுதியில் சுப விரையங்கள் ஏற்படலாம்.

தனஸ்தானத்தில் சனி வார மத்தியில் வக்ர நிலைக்கு செல்வது குடும்பம் தனம் வாக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமாக இருக்கும்.

அனுகூலமான நாட்கள் – 09,10

 

மீனம் :

இராசிக்கு 3,8 அதிபதி சுக்ரன் 3ம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் முயற்சிகள் இனிதே நிறைவேறும். சிறு தூர பயணங்கள் சாதகமாக அமையும். இளைய சகோதரங்களால் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வரவு அதர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

இராசிக்கு 2,9 அதிபதி செவ்வாய் சிம்மத்தில் நட்பு நிலையில் கேதுவுடன் சூட்சும வலு பெறுவதால் நல்ல தன வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் நிறைவேற சாதகமான வாரமாக அமைகிறது.

இராசிநாதன் மற்றும் 10 ம் அதிபதி குரு அஸ்தங்கம் நிலையிலேயே சஞ்சரித்தாலும் சந்திர அதி யோகத்தால்  வார இறுதியில் நல்ல மன நிலையில் தெளிந்த நிந்தனையுடன் தைரியத்துடன் எந்த ஒரு காரியத்தையும் இனிதாக செயல்படுத்துவீர்கள். தொழிலிலும் வார இறுதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

 

இராசியில் சனி சஞ்சரிப்பதால் மன அழுத்தம் வேதனை ஏற்பட்டு வந்த நிலையில் சனி வக்ர நிலைக்கு செல்வதால் இந்த மன அழுத்தம் சற்று விலகி நிம்மதியுடன் இருக்கும் அற்புதமான வாரமாக அமைகிறது..

சந்திரன் பாக்கியஸ்தானம் தொழில் மற்றும் இலாபஸ்தானத்தில் ஒளியுடன் இருப்பதால் தன வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல வாரமாக அமைகிறது.

அனுபூலமான நாட்கள் : 9,10,11,12

 

சுபம் !!!

 

தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்

9566620842 / 9944443215

astromanibharathy@gmail.com

 

 

 

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author