புதிய உச்சம் தொடப்போகும் உலக வெப்பநிலை!

உலக நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சம் தொடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author