சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கின்ற பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீபுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், ஆழமாகி வருகின்ற சீன-பாகிஸ்தான் முழு நேரப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு, பொது மக்களின் உறுதியான ஆதரவு, வலிமையுடைய இயக்காற்றல், பரந்துபட்ட வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, ஒத்துழைப்புகளை நெருக்கமாக்கி, நெடுநோக்கு ஒருங்கிணைப்பை ஆழமாக்கி, புதிய யுகத்தில் மேலும் நெருங்கிய சீன-பாகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, பிரதேசத்தின் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்கு மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்தை, பாகிஸ்தானின் வளர்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணைப்பு மேற்கொள்வதைச் சீனா முன்னேற்றி, வேளாண்மை, சுரங்கத்தொழில், சமூகம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதாகவும், ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புமுறைகளில் பாகிஸ்தானுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பு அறைக்கூவலைச் சமாளித்து, உலக மேலாண்மையை மேம்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு நலன்கள் மற்றும் சர்வதேச நேர்மையைப் பேணிக்காக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷாபாஸ் கூறுகையில், சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணி, பாகிஸ்தானின் வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, பாகிஸ்தான் மக்களுக்கு நன்மை புரிந்துள்ளது. சீனாவுடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்தை முன்னேற்றி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கும்.
மேலும், தைவான், ஷிட்சாங், சின்ஜியாங், தென் சீனக் கடல் உள்ளிட்ட மைய நலன்களுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளிலும், சீனாவின் நிலைப்பாட்டுக்குப் பாகிஸ்தான் உறுதியாக ஆதரவு அளிக்கிறது என்றார்.