2024 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி, நடந்து வரும் உலக அழகி போட்டியின் போது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்கானா அரசு கடுமையாக மறுத்துள்ளது.
மே 16 அன்று ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி இரு தினங்களுக்கு முன்னர் விலகினார்.
அவரது தாயாரின் உடல்நலம் தொடர்பான குடும்ப அவசரநிலை என ஏற்பாட்டாளர்கள் மேற்கோள் காட்டியிருந்தாலும், மேகி தனது நேர்காணலில், போட்டி சூழல் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்விற்கு நிதி உதவி செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நடுத்தர வயது ஆண்களுடன் பழகும்படி தன்னிடம் கேட்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
உலக அழகி போட்டியிலிருந்து வெளியேறிய மிஸ் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த தெலுங்கானா அரசு
