தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முதல் மாநிலக் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV தளபதி என்று கூறினார்.
அவர் ஜோசப் விஜய் என்பதைத்தான் சுருக்கி ஜே வி என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவர் கட்சித் தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது தளபதி என்று தான் கூற வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் ஜோசப் விஜய் என்பதை சுருக்கி ஜேவி என்று கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.